இடுப்பை வலுப்படுத்தும் சுவஸ்திகாசனம் செய்யும் முறை

#meditation
Prasuat year ago

   
இந்த ஆசனம் முதுகு தண்டினை வலுப்படுத்தும். முதுகு சதையினை வீரியப்படுத்தும். இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

செய்முறை

சமதரையில் அமர்ந்து வலதுகால் பாதத்தை உடலை நோக்கி இழுத்து வைத்துக் கொண்டு இடது பாதத்தை வலது கால் தொடை, முழங்கால் இடைச்சந்தில் உள்நுழைக்கவும்.

கால் விரல்கள் கீழாகவும் குதிங்கால் மேலாகவும் இருக்க வேண்டும். அதேபோல் இடது காலை இழுத்து வலது கால் உள்பக்கம் வைக்க வேண்டும்.

இரண்டு குதிக்கால்களும் இருபக்க அடித்தொடை அருகே இருக்க வேண்டும். கைகள் மூட்டுக்களின் அருகில் சின்முத்திரை நிலையில் வைக்க வேண்டும். முதுகினை நேராக வைத்து சுவாசத்தை உள்ளிழுத்து வெளியேவிட்டு சீராக்க வேண்டும்.

பயன்கள்

  • இடுப்பை வலுப்படுத்தும்.
  • நரம்பினை வலுப்படுத்தும்.
  • முதுகு தண்டினை வலுப்படுத்தும்.
  • முதுகு சதையினை வீரியப்படுத்தும்.

மேலும் யோகாசன தகவல்களை பார்வையிட இங்கே அழுத்தவும்