உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் 63 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

Rehaat day's ago

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, உட்பட சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் 63 பேரையும் 12ம் மாதம் 09ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.  

சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், உட்பட 4 பேரை மட்டக்களப்பு பொலிசார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளை கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவித்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த வெவ்வேறு இரு வழக்கு இலக்கங்களை கொண்ட 64 பேரும் நாட்டிலுள்ள பொலநறுவை, அனுதாரபுரம், கேகாலை, திருகோணமலை, போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கடந்த மாதம் சஹ்ரானின் மனைவி பிணை மனுதாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.