அரச அதிகாரிகள் சரியாக செயற்பட்டிருந்தால் இலங்கை சொர்க்கமாக இருந்திருக்கும்: சனத் நிஷாந்த

Pratheesat day's ago

இந்நாட்டின் அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை சரியாகச் செய்திருந்தால் எமது நாடு இன்று சொர்க்கமாக இருந்திருக்கும் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

சிலாபம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

உலகில் நம்மை விட வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போதுஇ நமது நாட்டில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

இலங்கையை விட ஆசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் இருந்தாலும், ஒட்டுமொத்த ஆசியாவிலேயே அதிகளவான அரச ஊழியர்களைக் கொண்ட நாடாக இலங்கை விளங்குகிறது.

எனினும், மக்கள் பிரதிநிதிகளாகிய எம்மாலும், அரச சேவையில் இருக்கும் அரச உத்தியோகத்தர்களாலும் செய்ய வேண்டிய சேவை சரியாக நடைபெறவில்லை என உணர்கிறேன்.

அப்படி நடந்திருந்தால் இன்று நம் நாடு சொர்க்கமாக இருந்திருக்கும். இன்று நம் நாடு எங்கே இருக்கிறது என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்பது எனது தனிப்பட்ட கருத்து என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்