3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய இலங்கை அணி

#Australia #Srilanka Cricket
Prasuat month ago

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் நிதானமாக துடுப்பெடுத்தாடிய சாமிக்க கருணாரத்ன 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

குசல் மெந்திஸ் 26 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் Hazlewood, Cumminsமற்றும் Kuhnemann ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதன்படி, 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 39.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் Alex Carey ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் துனித் வெல்லாலகே மூன்று விக்கெட்டுக்களையும் மற்றும் மஹீஸ் தீக்சன 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய, 5 போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக சாமிக்க கருணாரத்ன தெரிவு செய்யப்பட்ட நிலையில் தொடராட்ட நாயகனாக குசல் மெந்திஸ் தெரிவு செய்யப்பட்டார்