சில கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பெயர் பெற்றாலும் அடுத்தடுத்து படங்களில் முன்னேற முடியாமல் தவிக்கும் நடிகர்கள்

#Actor #Tamilnews #Tamil-Cinema #Tamil Nadu #Lanka4
kaniat month ago

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் முழு முயற்சியுடன் தன் திறமையை நிரூபிப்பதற்காக கடினமாக உழைத்து வருகிறார்கள். அப்படி வந்த சில நடிகர்கள் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தாலும் மேலும் மேலும் முன்னேற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி பெரிய அளவில் பேசப்பட்ட ஐந்து சூப்பர் கதாபாத்திரங்களை பற்றி நாம் பார்க்கலாம்.

போஸ் வெங்கட் : இவர் சினிமாவில் சின்னத்திரை தொலைக்காட்சி மூலம் நடிப்பதற்கான வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்பு இவர் ஈரநிலம், சிவாஜி, மருதமலை, சிங்கம், கோ, போன்ற பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக் இணையாக நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனாலும் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்.

கிஷோர் குமார் : இவர் கன்னடம்,தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர். இவர் தமிழில் பொல்லாதவன், ஹரிதாஸ், மற்றும் கபாலி படங்களில் நடித்ததன் மூலம் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. மேலும் சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் மற்றும் காந்தாரா படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா ஒரு நடிகராக அங்கீகாரத்தை பெற்றார். ஆனாலும் இவர் தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார்.

இளவரசு : இவர் தமிழ் சினிமாவில் சில படங்களில் ஒளிப்பதிவாளர் மற்றும் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார். இவர் 50க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் மற்றும் முத்துக்கு முத்தாக என்ற திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகருக்கான சினிமா விருதையும் வென்றார். மற்றும் இவர் களவாணி படத்தில் விமலுக்கு அப்பாவாக நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இப்படி நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த இவரே ஒதுக்கி விட்டோம்.

பொன்வண்ணன் : இவர் ஓவியராக இவரது வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் பாரதிராஜாவிடம் இயக்குனராகவும் மற்றும் எழுத்தாளராகவும் பயிற்சி பெற்றார். பின்பு கருத்தம்மா, பருத்திவீரன், அயன், காவிய தலைவன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் விஜய் நடித்த தலைவா படத்தில் இவர் நெகட்டிவ்ரோலில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டு வந்தார். மேலும் இவர் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் யாரும் இவரை கண்டுக்காமல் போய்விட்டார்.

ஜெயப்பிரகாஷ் : இவர் முதன் முதலில் தயாரிப்பாளராக சினிமாவிற்கு அறிமுகமானார். பின்பு பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தார். இவர் நடித்த படங்களில் பசங்க, நாடோடிகள், யுத்தம் செய், மங்காத்தா, நடிகராகவும் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த யுத்தம் செய் படத்தில் டாக்டர் ஜூடோஸ் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனாலும் அதற்கு அப்புறம் பல கதாபாத்திரத்தில் நடித்தாலும் இவரால் மேலங்கி வர முடியாமல் தவித்து வருகிறார்.