பாடகர் மனோ பிறந்தநாள் 26-10-2021

#history
Kesariat year ago

நாகூர் பாபு என்ற மனோ இந்திய திரைப்பட பாடகர், நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் பிரபல தொலைக்காட்சி நடத்திய  இசைப்போட்டியின் நடுவரும் ஆவார். இவர் இதுவரை பல விருதுகளை பெற்றுள்ளார். அதில் ஆந்திர மாநில அரசால் நந்தி விருதும், தமிழ் நாடு அரசில் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

மனோ அவர்கள் 30000 பாடல்களுக்கு மேல் தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், தமிழ், ஒரிய மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் கிட்ட தட்ட 3000 -திற்கும் அதிகமான மேடைகளில் பங்கேற்றுள்ளார். இவர் இசைஞானி இளையராஜா இசையமைப்பில் 2000 பாடல்களை பாடியுள்ளார். 

மனோ கிட்டத்தட்ட 30000 பக்தி பாடல்களை தமிழ், தெலுங்கு, ஒரிய, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 15 மொழிகளில் பாடியுள்ளார்.