16 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்! இலங்கை மதகுரு சென்னையில் கைது!

kaniat month's ago

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக தாக்கிய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த கிறிஸ்தவ மதகுரு மற்றும் அவரது மனைவி ஆகியோர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக டிடி நெக்ஸ்ட் என்ற செய்தி தளம்; செய்தி வெளியிட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஷெரோத் மனோகர் (58), அவரது மனைவி ஹெலன் (55) ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வந்து ஆதம்பாக்கத்தில் தேவாலயம் ஒன்றை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் தேவாலயத்திற்கு வருகை தரும் இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் போதகர் தவறாக நடந்து கொள்வார் என்றும், அவரது மனைவி ஹெலனும் அவருக்கு ஆதரவாக இருந்;தார் என்றும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் போதகர் மீது முறைப்பாட்டை அளிக்க யாரும் முன்வரவில்லை. சில நாட்களுக்கு முன், 16 வயது சிறுமி ஒருவரின் பாட்டி, மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக மதகுரு மீது முறைப்பாட்டை செய்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் நேற்று திங்கட்கிழமை சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதன்போது சம்பவத்தை உறுதி செய்த போலீசார், மதகுருவை கைது செய்தனர். குற்றத்தில் அவருக்கு உறுதுணையாக இருந்தமைக்காக அவரது மனைவி ஹெலனும் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை 24 வயது பெண் ஒருவரை குறித்த மதகுரு, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த முறைப்பாடு தொடர்பிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்