இந்திய அணியில் ராகுல் இல்லை என்கிறார், ரோகித்துடன் தொடங்குவது யார்!

Maniat month ago

நாக்பூர்: ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி விக்கெட் கீப்பராக ராகுல் செயல்பட மாட்டார் என தெரிவித்துள்ளார்.  

இந்தியா ஆஸ்திரேலியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை பங்கேற்க உள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 9 முதல் 13 வரை நாக்பூரில் நடைபெற உள்ளது. அடுத்துள்ள மூன்று போட்டி டெல்லி பிப்ரவரி( 17 முதல் 2

1), தர்ம சாலா ( மார்ச் 5), அகமதாபாத்தில் மார்ச் 9 முதல் 13 நடைபெற உள்ளது.

இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ஜடேஜா உள்ளிட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் இடம்பெற்ற ரிஷாப் பன்ட் விபத்தின் காரணமாக ஓய்வுபெற்று வருகிறார்.
 
இதில் விக்கெட் கீப்பராக யார் களமிறங்க போகிறார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் ஸ்ரீகர் பரத், இஷான் கிஷான் இடையே போட்டி காணப்படுகிறது.

ராகுல் விக்கெட் கீப்பராக களமிறங்குவதில்லை

இந்திய அணிக்கு தரப்பில் வெளியான செய்தி:

ராகுல் கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு காயங்களால் அவதிப்பட்டு உள்ளார். இவரை டெஸ்டில் விக்கெட் கீப்பராக களம் இறங்குவது நல்லதல்ல, புதிதாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளது . டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரையில் "ஸ்பெஷாலிஸ்ட்" விக்கெட் கீப்பர்கள் தான் அணிக்கு தேவைப்படும். இதில் பரத் இஷான் கிஷான் இருவரில் யாரை தேர்வு செய்வது என அணி நிர்வாகம் தான்  முடிவு செய்ய வேண்டும்.

பரத் அறிமுகம் 

ராகுல் தேர்வு செய்யப்படவில்லை எனில் பரத் அறிமுகம் ஆகலாம். இதில் கடந்த ஒன்றரை ஆண்டாக அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பரத் காத்திருக்கிறார். இவருக்கு போட்டியாக உள்ள இஷானுக்கு இடம் கிடைப்பது சந்தேகம்? ஏனெனில் ஒரு நாள் டி 20க்கு இஷான் ஏற்கனவே விக்கெட் கீப்பராக உள்ளார்.