கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தீவிரம் காட்டும் ரஷியா - லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதலை தீவிரமாக்கியுள்ளதாக தகவல்!

#world news #Ukraine #Russia
Kesariat month ago

உக்ரைனில் வெற்றி பெறும் வரை, போரை கைவிட ரஷிய அதிகாரிகள் திட்டமிடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெற்றியைப் பெறுவதற்காக இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து அவர்கள் முடுக்கிவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து உதவி செய்வதில் சோர்வடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, உக்ரைனுக்கு தேவையான, பணம் மற்றும் ஆயுதங்கள் கிடைக்க தட்டுப்பாடு ஏற்படலாம் என்று ரஷிய தரப்பு கணித்துள்ளதாக கூறப்படுகிறது. 3 மாதங்களை கடந்து நடைபெற்று வரும் போரில், உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-ஆவது பெரிய நகரமாக கார்கிவ்-ஐ கைப்பற்ற ரஷ்யா தவறியது.

இந்நிலையில், கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்களை குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேவைப்பட்டால் இன்னும் அதிகமான நபர்களை சேர்க்க ரஷிய ராணுவம் தயாராக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய படைகளால் இதுவரை, லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 5% மற்றும் டொனெட்ஸ்க் பிரதேசத்தின் 60 சதவீதத்துக்கும் குறைவான பகுதியை மட்டுமே கைப்பற்ற முடிந்தாக கூறப்படுகிறது.

இதனால், குறைந்தபட்சம் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களை ரஷிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டுமே, உக்ரைன் போரில் வெற்றி பெற்றதாக கருத முடியும் என்ற எண்ணத்தில் ரஷியா செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனை கைப்பற்ற தாக்குதலை தீவிரமாக்கியுள்ளதாகவும் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.