ரஜினிகாந்த் கமலஹாசன் நடிப்பில் மிரண்டு போய் பார்த்த இரண்டு படங்கள்

#Cinema #Tamil-Cinema #Kamal #Lanka4
kaniat month ago

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் சமகாலத்து போட்டியாளர்கள். ரஜினிக்கு முன்னாலேயே கமல் சினிமாவுக்கு வந்து விட்டாலும் இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் தான் வளர்ந்து வரும் நாயகர்களாக இருந்தார்கள். இருவருக்குள்ளும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒரே படங்களில் நடித்திருக்கிறார்கள்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்தாலும் இன்று வரை கமலஹாசனை தனக்கு சமமாக பார்க்காமல் தனக்கு ஒரு படி மேல் வைத்து தான் பார்ப்பார். அதேபோன்று எந்த ஒரு மேடையிலும் கமலஹாசனை பற்றி பேச ரஜினி ததவறியது இல்லை. ரஜினிகாந்த் கமலஹாசன் நடிப்பில் மிரண்டு போய் பார்த்த இரண்டு படங்களும் உண்டு.

1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அவ்வை சண்முகி. இந்த படத்தில் ஜெமினி கணேசன், நாகேஷ், மீனா, ஹீரா, மணிவண்ணன், நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். மிஸஸ் டவுட் பயர் என்னும் ஆங்கில படத்தின் கதை தழுவலை தான் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவ்வை சண்முகியாக எடுத்திருந்தார்.

இந்தப் படத்தில் கமலஹாசன் ஒரு நடுத்தர வயதுடைய பெண் வேடமிட்டதோடு, அந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசியிருப்பார், பாடியும் இருப்பார். இந்தப் படத்தைப் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனதோடு, படம் முழுக்க வயிறு குலுங்க சிரித்து ரசித்தாராம்.

2000 ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடித்து, இயக்கி, தயாரித்த திரைப்படம் ஹே ராம். இந்த படத்தின் மூலமாகத்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதன் முதலாக நேரடி தமிழ் படத்தில் அறிமுகமாகினார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் இந்தியில் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் சர்ச்சையான கருத்துக்களையும் பெற்றது. இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு முன்னான இந்தியா மற்றும் மகாத்மா காந்தி படுகொலையை பற்றி தைரியமாக பேசிய படம் ஹேராம். இந்தப் படம் அப்போது ரொம்ப பிரம்மாண்டமாக பார்க்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை ரொம்பவும் சீரியஸாக பார்த்தாராம். படத்தில் கமலின் நடிப்பை பார்த்து மிரண்டு போயிருக்கிறார் ரஜினிகாந்த்.