தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு

#weather #Rain #Sri Lanka #Lanka4
kaniat month ago

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (01) இலங்கையின் கிழக்கு கரையை அடைய அதிக சாத்தியம் உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் தாக்கம் காரணமாக இன்று (30) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை முன்னறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரியுள்ளது.