சட்டவிரோதமாக கிருமிநாசினிகளைக் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது

kaniat month's ago

கரம்பைப் பகுதியிலிருந்து சட்டவிரோதமாக கிருமிநாசினிகளைக் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (30-11-2022) இரவு இடம்பெற்றுள்ளது.

கரம்பைப் பகுதியில் இருந்து நாகவில்லு பகுதிக்கு சட்டவிரோதமாக கிருமிநாசினிகளைக் கடத்திச் செல்வதாக புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது 5 கிலோ பக்கற்றுகள் அடங்கிய 148 பக்கற்றுகள் கிருமிநாசினி பக்கற்றுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அல்காஸிம் சிட்டி பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளப் புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.