ஈரானில் போராட்டக்காரர்கள்-பாதுகாப்பு படையினர் மோதல் - 9 பேர் உயிரிழப்பு

#Iran #Protest #Death
Prasuat day's ago

ஈரானில் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண், போலீஸ் கஸ்டடியில் இருந்தபோது உயிரிழந்தார். 

போலீசார் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், பெரும் போராட்டத்தையும் தூண்டியது. 

ஈரானின் பல்வேறு நகரங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இந்த மோதல்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே காவல்துறை தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அந்த பெண் மாரடைப்பால் இறந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.