துருக்கி நிலை நடுக்கத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் -உதவ நாங்கள் தயார்!!

#world news #Earthquake #Lanka4 #Tamilnews #Death #லங்கா4
Prabhaat month ago

துருக்கியில் ரிக்டர் அளவில் 7.8 என உருவான நிலநடுக்கம், சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் எகிப்து வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் துருக்கிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர், உடைமைகளை இழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

துருக்கி அதிபரின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிர்களையும், உடைமைகளையும் இழந்தது வேதனை அளிக்கிறது என்றும்  கவலையடைந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

இந்த துயரமான தருணத்தில் துருக்கி மக்களுக்கு இந்தியா உறுதிணையாக இருப்பதோடு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

'எரிசக்தி வாரம்' மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் பேசியதாவது, "துருக்கியில் ஏற்பட்ட அபாயகரமான நிகழ்வை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதைவிட அதிகமாக பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது 

தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளுக்கான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட நாய்கள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையின் 100 பேர் கொண்ட 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. 

தேவையான மருந்துகளுடன் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் தயாராக உள்ளது. அங்காராவில் உள்ள இந்திய தூதரகம், இஸ்தான்புலில் உள்ள இந்திய துணை தூதரகம் மற்றும் துருக்கி அரசுடன் இணைந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.
இக்கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர், உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப்படை, பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சகம், விமானப் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.