சிங்கப்பூர் சூப்பர் மார்கெட்களில் அதிகரிக்கும் பால்மா திருட்டு சம்பவங்கள்

#Singapore #Milk Powder #Super_Market #Theft #பால்மா #world news #Tamilnews #Lanka4
Prasuat month ago

சிங்கப்பூரில் பால் மாவுத் திருட்டுச் சம்பவங்களில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரில் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் Leong Mun Wai கடந்த 5 ஆண்டுகளில் சுப்பர் மார்க்கெட்களில் நடக்கும் திருட்டுச் சம்பவங்களில் பால் மாவுத் திருட்டின் விவரங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதோடு பால் மாவைத் திருடியவர்களில் கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் அவர்கள் பால் மாவைத் திருடிய காரணங்களையும் அவர் வினவினார்.

அதற்குச் சட்ட, உள்துறை அமைச்சர் சண்முகம் எழுத்துபூர்வப் பதிலளித்தார்.

2018க்கும் 2022க்கும் இடையே பேரங்காடிகளில் 398 பால் மாவுத் திருட்டுச் சம்பவங்கள் நடந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்தத் திருட்டுச் சம்பவங்களில் பால் மாவுத் திருட்டுச் சம்பவங்கள் 7 சதவீதம் என்றும் காவல்துறை அதிகாரிகள் சந்தேக நபர்களில் 77 சதவீதத்தை அடையாளம் கண்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகள் பால் மாவு களவாடப்பட்ட காரணங்களைக் கண்காணிப்பதில்லை என்றும் சிலர் பால்மாவைத் திருடி அதை லாபத்திற்கு விற்கின்றனர் என்றும் அமைச்சர்  சண்முகம் தெரிவித்தார்.