தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்த ஓவியர்

Keerthiat month ago

புதுச்சேரியைத் சேர்ந்த ஓவியப்பட்டதாரி பெண் 7 கிலோ கோலப்பொடியைக் கொண்டு தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார்.

ஐபிஎல் தொடர் இறுதி நிலையை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரிட்சையில் ஈடுபட்டுள்ளன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணி களமிறங்கி ஆடி வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியைத் சேர்ந்த ஓவியப்பட்டதாரி பெண் ஒருவர் சென்னை அணி வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து தோனியின் உருவப்படத்தை வரைந்துள்ளார்.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஓவியப்பட்டதாரி அறிவழகி. இவர் ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெல்வதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் தோனியின் உருவத்தை ரங்கோலியாக வரைந்துள்ளார். இதை 12 அடி உயரம் 12 அடி அகலத்தில் 7 கிலோ கோலப்பொடியைக் கொண்டு 2 நாட்களில் வரைந்துள்ளார். அறிவழகியின் இந்த ரங்கோலியைக் கண்டு பலரும் பாரட்டி வருகின்றனர்.