காவல்துறையினரின் சமிக்ஞையை மீறி உந்துருளி ஓட்டிய இளைஞனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை

kaniat day's ago

 காவல்துறையினரின் சமிக்ஞையை மீறி உந்துருளி ஓட்டிய இளைஞனுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்த பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் 45 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதித்துள்ளது.

நெல்லியடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், போக்குவரத்து காவல்துறையினர் கடமையில் இருந்த போது, வீதியில் உந்துருளியில் வந்த இளைஞனை மறித்த போது, காவல்துறையினரின் சமிக்ஞையை மீறி இளைஞன் அவ்விடத்திலிருந்து தப்பியோடி இருந்தார்.

குறித்த இளைஞனின் உந்துருளியின் இலக்கத்தின் அடிப்படையில், இளைஞனை அடையாளம் கண்டு காவல்துறையினர் கைது செய்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதன் போது இளைஞன் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒரு மாத சிறை தண்டனை விதித்த நிலையில் 45 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.