சுவிற்சலாந்தில் இன்னும் ஒரு மிலியன் வயது வந்தவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்ளவில்லை.

#world news #Covid 19 #Switzerland
Kesariat day's ago

சுவிற்சலாந்தில் நவம்பர் 23ம் திகதி நடந்து முடிந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றுக்கள் 3961 பதிவாகியுள்ளது. அன்று வைத்தியசாலையில் 1011 பேரும் அதில் தீவிர சிகிச்சை பிரிவில் 172 பேரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அன்றைய தினம் 5 பேர் இறந்தனர்.

தற்போது நாட்டில் 65 வீதத்தினர் முழு தடுப்பூசியும் முழு சனத்தொகையில் பெற்றுள்ளனர். அதே வேளை ஏறத்தாழ ஒரு மிலியன் வயது வந்தவர்கள் இன்னும் தடுப்புசி பெறவில்லை.

அக்டோபர் 26 அன்று, சுவிஸ் மருந்துகளை ஒழுங்குபடுத்தும் Swissmedic, அதிக ஆபத்துள்ள நபர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு ஃபைசர்/பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் மூன்றாவது ஷாட்கள் அல்லது பூஸ்டர்கள் என்று அழைக்கப்படுவதை அங்கீகரித்துள்ளது. நவம்பர் 23 அன்று 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Pfizer/BioNTech கூடுதலாக அங்கீகரிக்கப்பட்டது. மாடர்னா பூஸ்டர் அரை டோஸாகப் பயன்படுத்தப்படுகிறது.