இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளை தொடர்ந்தும் வழங்கப்போவதில்லை - ஸ்கொட்லாந்து பொலிஸார்

Rehaat day's ago

மனித உரிமை கரிசனைகள் காரணமாக இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிகளை தொடர்ந்தும் வழங்கப்போவதில்லை என ஸ்கொட்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிவழங்குவது குறித்த ஒப்பந்தம் 2022 இல் முடிவடைந்த பின்னர் அதனை புதுப்பிக்கப்போவதில்லை எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸ் அறிவித்துள்ளது.

அத்துடன் இடைக்கால பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் ஸ்கொட்லாந்து பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.