அடல்ப் ஹிட்லர் எவ்வாறு போரில் வீழ்ச்சியடைந்தார் தெரியுமா?

#வரலாறு #ஹிட்லர் #யுத்தம் #தோல்வி #வைத்தியர் #history #hitler #War #loose #doctor
அடல்ப் ஹிட்லர் எவ்வாறு போரில் வீழ்ச்சியடைந்தார் தெரியுமா?

ஜெர்மனியின் ஹீரோவான அடல்ப் ஹிட்லர் போதைப் பொருள் அடிமை என்று உங்களுக்கு தெரியுமா? உண்மையில் அவர் சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான தாக்குதலுக்கு உத்தரவிட்ட போது கொகைன் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருந்ததாக வரலாறு கூறுகிறது.
காலை உணவிற்குப் பிறகு அவர் போதை ஊசிகளை அவரது வைத்தியர் மூலமாக அதனை ஏற்றிக்கொள்வாராம்.

இவ்வாறு ஒரு வரலாற்று நுால் தெரிவிக்கிறது. இந்த நுாலில் இருந்து சில தகவல்களை உங்களுடன் லங்கா 4 பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளது.

அடல்ப் ஹிட்லர் தனது வைத்தியர் மூலம் பல தற்போது சட்டவிரோதமான போதைப்பொருட்களாக இருப்பவைகளை ஊசி மூலம் ஏற்றிக்கொள்வார். சிலர் இதனால் ஹிட்லரைக் கொல்ல முயற்சிக்கின்றனரோ என்று கூட கருதினார்கள்.

ஹட்லர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவில் அவதிப்பட்டார். அவருக்கு வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்துள்ளன இதனால் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் அதிக வாயுவை வெளியேற்றுவதற்காக தனியே மேசையை விட்டு செல்ல வேண்டியிருந்தது.

அவரது வழக்கத்திற்கு மாறான உணவுப்பழக்கத்தால் அவரது நிலை மோசமடைந்து பன்றியின் இறைச்சியைச் சாப்பிடுவதை மனித சடலத்தை உண்பதற்கு இணையானது என்று கூறி 1931-இல் அதைக் கைவிட்டிருந்தார்.  பின்னர் நீர் நிறைந்த காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடத் தொடங்கியிருந்தார்.

இதனைக்கண்ட வைத்தியர் ஹட்லரது பிரச்சினைகளை குணப்படுத்த வாயு எதிர்ப்பு மருந்துகளை கொடுக்கத் தொடங்கினார். இவை ஹிட்லர் பிரச்சினையை தணித்தாலும் அவருக்கு கவனக்குறைவு மற்றும் தோல் சுருக்கம் என்பன ஏற்படலாயி்ற்று.

இதன் பிற்பாடு எப்போதும் வைத்தியரை ஹிட்லர் தன்னுடனேயே வைத்திருந்தார். இவ்வாறு மருந்துகளை உட்செலுத்த செலுத்த ஹிட்லரின் உடலில் அதிசயங்கள் நிகழ்ந்தது. இவ்வாறான போதைப்பொருட்களை பயன்படுத்திக்கொண்டிருந்த போது தான் அவர் ரஷ்ய தாக்குதலை நடத்தினார்.

இந்த பிரச்சினைகளை விட ஹிட்லருக்கு பாலியல் உந்துததல் குறைபாடும் ஒரு பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. இந்தக் குறைபாட்டைச் சமாளிப்பதற்காக மருத்துவர் மோரெல் ஹிட்லருக்கு வீரியம் மிக்க ஊசி போடத் தொடங்கினார்.

இவை இளம் காளைகளின் புரோஸ்டேட் சுரப்பிகளில் இருந்து எடுக்கப்பட்ட திரவத்தைக் கொண்டிருந்தன. டெஸ்டோஸ்டிரோனில் இருந்து பெறப்பட்ட டெஸ்டோவைரான் என்ற மருந்தையும் மோரெல் பரிந்துரைத்தார். தனது காதலியும் பின்னாளில் மனைவியுமான ஈவா பிரானுடன் இரவைக் கழிப்பதற்கு முன் ஹிட்லர் தானே இந்த ஊசி போட்டுக் கொள்வார்.

இத்தகைய மருந்துகளை உட்கொண்டது ஹிட்லரின் ஒழுங்கற்ற நடத்தைக்கு வழிவகுத்தது. இத்தாலியில் ஹிட்லருக்கும் முசோலினிக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது இது வெளிப்படையாகத் தெரிந்தது. போரில் அணி மாறிவிட வேண்டாம் என்று முசோலினியை அவர் வற்புறுத்தியபோது, வெறித்தனமாக மாறியிருந்தார்.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வரும் போது ஹிட்லரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இருப்பினும் வைத்தியர் ஹிட்லரை தொடர்ந்து இருந்தார். ஹிட்லரது மனைவி வைத்தியரை பிரியும் படி கூறியும் ஹிடலர் போதைப்பொருளின் அடிமையாகி காணப்பட்டார்.

கிட்டத்தட்ட ஹிட்லரது இறுதி வரை வைத்தியர் அவருடன் பதுங்கு குழியிலே இருந்தார். போர் முடிந்த பிறகு அமெரிக்கர்களால் வைத்தியர் விசாரிக்கப்பட்ட போது ஹிட்லரின் ஆரோக்கியத்திற்கு உதவியவர் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வைத்தியர் 1948ல் பக்கவாதத்தால் இறந்தார்.

ஹிட்லரின் வீழ்ச்சிக்கு இவரை விட கூடுதலாக வேறு யாரேனும் செய்திருப்பார்களா என்பது இதிலிருந்து எமக்கு புரிகிறதல்லவா....