ஜனாதிபதியிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றார் மத்திய வங்கியின் புதிய ஆளுநர்!

#Central Bank #Sri Lanka President #Governor
Yugaat day's ago

இலங்கை மத்திய வங்கியின் 16வது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் தனது நியமனக் கடிதத்தை, அஜித் நிவாட் கப்ரால் பெற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

பிரசித்திப் பெற்ற பட்டயக் கணக்காளரான அஜித் நிவாட் கப்ரால், இதற்கு முன்னர் அமைச்சுக்களின் செயலாளராகவும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராகவும் கடமையாற்றியிருந்தார்.