பயனர் நலனுக்கு இன்ஸ்டாவில் அறிமுகமான புதிய அம்சம்

Prasuat month's ago

இன்ஸ்டாகிராம் செயலியில் 'டேக் ஏ பிரேக்' (Take a Break) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் இளைஞர்களை பாதுகாக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்ச்சியாக அதிக நேரம் செயலியில் செலவிடுவோரை, சிறிது நேரம் மற்ற பணிகளை செய்ய நினைவூட்டும். 

முதற்கட்டமாக இந்த அம்சம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வழங்கப்படுகிறது. மற்ற நாடுகளில் இந்த அம்சம் வரும் மாதங்களில் வழங்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாத வாக்கில் வெளியிடப்பட்டது.

இந்த அம்சத்தை செட்டிங்ஸ் பேனலில் செயல்படுத்த முடியும். இந்த அம்சத்தில் பத்து நிமிடங்கள், 20 நிமிடங்கள் அல்லது 30 நிமிடங்கள் என பயனர் விரும்பும் கால இடைவெளியில் நினைவூட்டியை செயல்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.