இணையத்தில் லீக் ஆன நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமண அழைப்பிதழ்..!

Prabhaat month ago

தமிழ் திரையுலகில் தற்போது க்யூட்டாக வலம் வரும் நட்சத்திர ஜோடி யார் என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தான் .

இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 9ம் தேதி இருவரும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது . அவர்கள் திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது .

இந்நிலையில் தற்போது அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் லீக் ஆகி உள்ளது . அந்த அழைப்பிதழில் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் தான் திருமணம் நடக்கிறது என குறிப்பிட்டு இருக்கின்றனர்.

இதனால் அவர்கள் திருமணம் எங்கு நடக்கிறது என்கிற கேள்விக்கு ஒரு வழியாக பதில் கிடைத்துள்ளது .

nayan

விரைவில் திருமணம் நடைபெற இருப்பதால் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்களில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா இருவரும் விசேஷ பூஜைகள் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் உள்ள மகாபலிபுரத்தில் நடக்க இருக்கும் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.