வடிவேலு குரலில் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' பாடல்

Nilaat month's ago

நீண்ட இடைவேளைக்கு பின்னர் வடிவேலு ஹீரோவாக நடித்த ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடைந்து வரும் டிசம்பர் 9-ம் தேதி இந்த படம் பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘பணக்காரன்’ என்ற பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன்னர் இந்த பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது

வைகைப்புயல் வடிவேலு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவரும் இணைந்து பாடிய இந்த பாடலை விவேக் எழுதி உள்ளார் என்பதும், சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த என்ற பாடல் ஜாலியான பாடலாக முதல் முறை கேட்கும்போதே ரசிகர்களை கவர்ந்து உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. எனவே இந்த பாடல் நிச்சயம் ரசிகர்களை ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாத்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் வடிவேலு, ரமேஷ், ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, ஷிவானி உள்பட பலர் நடித்துள்ளனர். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது