யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் திரைப்பட பாணியில் இடம்பெற்ற வாள்வெட்டுதாக்குதல்

#Sri Lanka #sri lanka tamil news #Lanka4 #Jaffna #Police
Nilaat day's ago

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில், விபத்தை ஏற்படுத்தி விட்டு, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரு குழுவினருக்கு இடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பட்டா ரக வாகனத்தில் வந்த குழுவினர் கார் ஒன்றை மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன