பாகிஸ்தான் படுகொலை தொடர்பாக 100 இற்கும் மேற்பட்டோர் கைது. கோட்டாபாயவின் ஒரு தொலைபேசி அழைப்பால் கிடைத்த நீதி

Keerthiat month ago

பாகிஸ்தானில்,   மத நிந்தனை செய்ததாககூறி படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது பழைய கதை.

இருந்தும் அ ந்த நெருப்பு உலகளாவிய ரீதியில் இனம், மதம், நிறம் தாண்டி கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.  

இந்நிலையில், இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசரமாக தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார். இருவரின் உரையாடலில் சற்று சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரு நாட்டு மக்களிடமும், இஸ்லாமியர்களிடம் இருந்த கசப்புணர்வு. சற்று நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமது தேசத்தின் கோபத்தையும் அவமானத்தையும் இலங்கை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கலந்துரையாடியதாக தனது டுவிட்டரில் கூறிய இம்ரான் கான், சம்பவம் தொடர்பில் 100 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதையும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு எந்தவிதமான பக்கசார்பும் இல்லாமல் நடவடிக்கை எடுப்பதை நீங்களும் உலகமும் தமது நீதியை அறியும் எனவும், 

அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்குத் தொடரப்படும் என உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

அதற்க்கு கோட்டாபாய ராஜபக்சே அவர்கள் கூறுகையில், எமது நாட்டவர் தவறு இழைத்திருப்பின் அவரை தண்டிக்க உங்கள் நாட்டு சட்டம் முடிவெடுத்திருந்தால், அதற்க்கு நாமும் அனுசரித்திருப்போம். அதை சில மத துவேசிகள் கையில் எடுத்து செய்த கொடுமையை நாமும் எமது நாட்டு மக்களும் ஒருபோது ஏற்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு மாத்திரமன்றி, மனித நேயமுள்ள உலகில் அனைவருக்கும் அது பாரிய அதிர்ச்சியாகும் எனக் கூறிய அவர், அடிப்படைவாதத்துக்கு எதிராக முழு உலகமும் ஒரே நோக்கத்துடன் நின்று செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் இதை இலங்கையில் வாழும் இஸ்லாமியர்களும், இஸ்லாமிய மத தலைவர்களும் வன்மையாக கண்டித்திருக்கின்றன. 

இது பற்றி இலங்கை இஸ்லாமிய தலைவர்கள் குழு விரைவில் பாகிஸ்தான் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.