பாரிஸில் கடந்த மார்ச் மாதம் காணாமல் போன பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு

Prasuat day's ago

பாரிஸில் கடந்த மார்ச் மாதம் காணாமல் போன பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவ்ளின் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாரிஸ் நீதிமன்றம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த 31 வயதான சாதனா என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் மாதம் 5ஆம் திகதி இவ்ளின் ஆற்று பகுதியில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு  பாரிஸ் நீதிமன்றம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.

சாதனா கடைசியாக கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு யாரோ ஒருவரை பார்ப்பதற்காக சென்றிருந்தார் என இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் அவர் காணாமல் போன நாளில் இருந்து சரியாக ஒரு மாத காலப்பகுதியான ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் படகு ஒன்றுக்குள் அருகில் ஆடையற்ற நிலையில் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த இளம் பெண் வேலையில்லாத நிலையில் வாழ்ந்து வந்துள்ளார். மேலும் அவர் பாரிஸ் 14 வது வட்டாரத்தில் அமைந்துள்ள ஒரு தங்குமிடத்தில் வசித்து வந்துள்ளார்.

எனினும் அவர் தனிமையில் வசிக்கவில்லை எனவும் அவருக்கு துணையிருப்பவதாகவும், 1.60 மீற்றர் உயரம், நீண்ட அடர் பழுப்பு முடியை கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் அவருக்கு பிரெஞ்சு மொழி பேச தெரியாதென பொலிஸார் கூறியுள்ளனர். 

விசாரணை மேற்கொள்ளும் பொலிஸார் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது சாதாரணமாக நிகழவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.