கடலில் நீராடிய இரு சிறுவர்கள் மாயம்: மட்டக்களப்பில் சம்பவம்

#Batticaloa
Pratheesat day's ago

கடலில் நீராடிய ஏழு சிறுவர்களில் இருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு - கல்குடா, கும்புறுமூலை கஜுவத்தை கடலில் , கிரான் பகுதியைச் சேர்ந்த ஏழு சிறுவர்கள் நீராடிக் கொண்டிருந்த போதே இருவர் கடலில் மூழ்கியுள்ளனர்.

இதில், கிரான் பிரதான வீதியைச் சேர்ந்த ஜீவானந்தா சுஜினன் (வயது 16, ச.அஸ்வன் (வயது 16) ஆகிய இரு சிறுவர்களும் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

கடலில் நீராடிய மற்றுமொரு சிறுவன் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலில் காணாமல் போன சிறுவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதுடன், இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இலங்கை செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்