பிரான்ஸில் வன்செயல் அதிகரித்ததையடுத்து மக்ரோன் பாதுகாப்பு படையை இரட்டிப்பாக்க உத்தேசம்

#world news
Kesariat day's ago

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இனவெறி மற்றும் மிருகத்தனமான குற்றச்சாட்டுகள் எழுந்த பின்னர் காவல் துறையினரின் ஆய்வை அறிவித்துள்ளார்.

நீங்கள் உங்கள் பாதுகாப்புப் படைகளை நேசிக்கும் போது, அவர்களை எதுவும் செய்து விட முடியாது என்று மக்ரோன் கூறினார்.

காவல் துறை மற்றும் சமூகங்களுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதும், அதிகாரிகளின் பணி நிலைமைகளளை மேம்படுத்துவதுமான நோக்கங்களை கொண்ட சீர்திருத்தங்களை அவர் அறிவித்தார்.

நேற்று மக்ரோன் பிரஞ்சு சமூகம் வன்முறையாக வளர்ந்து வருவதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் தடியடி செய்யும் பொலிஸாரின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதாகவும் அறிவித்தார்.

அவர் 2022இல் 500 மிலியன் யுரோக்களை படையின் பட்ஜெட்டுக்காக வழங்க உறுதியளித்தார்.