மிகப் பிரம்மாண்டமான படத்தை எடுக்க முடிவு செய்த லிங்குசாமி அதற்காக கையில் எடுக்கும் பையா 2

#Tamil-Cinema #Cinema #Lanka4
kaniat month ago

லிங்குசாமி ஒரு நேரத்தில் பெரிய இயக்குனராக வலம் வந்து வெற்றி படத்தை கொடுத்து வந்தார். ஆனால் இப்பொழுது சினிமாவில் இவர் இயக்கத்தில் எந்த படமும் வரவில்லை. இதனால் இவர் பெரிய இயக்குனர் என்ற அந்தஸ்தை பெறுவதற்காக முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறார்.

அதற்காக இவர் கமல் மற்றும் சிம்பு போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர்களின் கால் சீட்டுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் பிஸியாக இருப்பதால் லிங்குசாமிக்கு எந்த தேதியும் கொடுக்கவில்லை.

இதனால் தொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த லிங்குசாமி திடீரென ஒரு முடிவெடுத்து விட்டார். பொதுவாக சினிமாவில் இப்பொழுது ட்ரெண்டாகி வருவது ஒருவரின் வெற்றி படங்களை எடுத்து அதன் இரண்டாம் பாகத்தை வெளியிடுவது தான். அதேபோல இவரும் இவரின் வெற்றிப்படமான பையாவை கையில் எடுத்திருக்கிறார்.

ஏற்கனவே பையா படத்தில் கார்த்திக் நடித்து சூப்பர் ஹிட் படமாக ஆனது. அதே மாதிரி இந்தப் படத்தையும் ஒரு பிரம்மாண்டமான படமாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். ஆனால் பையா 2வில் கார்த்தி கதாநாயகனாக இல்லை. இவருக்கு பதிலாக நடிகர் ஆர்யாவை தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஏற்கனவே ஆர்யாவிற்கும் சமீபத்தில் வெளிவந்த படங்கள் எதுவும் பெரிய அளவில் போகவில்லை. அதனால் லிங்குசாமிடம் கதை கேட்ட ஆர்யா, இந்த படத்தில் நான் நடித்தே தீர்வேன் என்று அடம் பிடித்து இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். இதற்கு முன்னதாகவே ஆரியவை வைத்து வேட்டை என்னும் படத்தை லிங்குசாமி எடுத்திருக்கிறார். அது வெற்றி படமாகவும் இவர்களுக்கு அமைந்தது.

மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவியின் மகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் துபாயில் உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கான தகவல் கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.