குறிஞ்சாக்கேணி படகு விபத்து - கைதான கிண்ணியா நகர சபை தவிசாளருக்கு விளக்கமறியல்!

Rehaat day's ago

கிண்ணியா- குறிஞ்சாக்கேணி படகு விபத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட நான்காவது சந்தேக நபரான கிண்ணியா நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமை எதிர்வரும் டிசம்பர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் அவரை இன்று (25)  பொலிசார் ஆஜர்படுத்திய போதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.