கனேடிய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆத்திரமடைந்த ஜஸ்டின் ட்ரூடோ!

#world news
Kesariat day's ago

கனடாவில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்த ஜஸ்டின்  இம்முறை பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, தடுப்பூசியை எதிர்க்கும் கூட்டத்தினர் அவருக்கு பெரும் பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர். அத்துடன், மருத்துவமனை மற்றும் பொது ஊழியர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என அவர் கூறியிருப்பதும் அவருக்கு எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. 
இதனால் ஆபாச வார்த்தைகள் அடங்கிய பதாகைகளை வெளிப்படையாக ஏந்தி, கெட்ட வார்த்தைகளை சத்தமாக கூறி ட்ரூடோவை விமர்சிக்கும் ஒரு பழக்கம் தற்போது கனடாவில் துவங்கியுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் பர்னபியில் ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றிற்காக ட்ரூடோ அமர்ந்திருக்க, அங்கு வந்த எதிர்ப்பாளர் ஒருவர், கெட்ட கெட்ட வார்த்தைகளால் ட்ரூடோவை விமர்சிக்கத் தொடங்கினார்.

ட்ரூடோ அமைதியாக அம்ர்ந்திருக்க, ஒரு கட்டத்தில் அந்த நபர், உன் மனைவி எங்கே, அவள் ஒரு ***** என கேள்விப்பட்டேன் என ட்ரூடோவின் மனைவியை ஆபாச வார்த்தையால் விமர்சிக்க, அதற்கு மேல் ட்ரூடோவால் பொறுக்கமுடியவில்லை.

சட்டென எழுந்த ட்ரூடோ, அந்த நபரைப் பார்த்து, நீ சென்று தொல்லை கொடுக்க மருத்துவமனை எதுவும் இல்லையா என கத்திவிட்டார்.

பொதுவாக, ட்ரூடோவின் மனைவியும் அவருடன் பிரச்சாரம், பேட்டி போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதுண்டு. ஆனால், நல்ல வேளையாக இந்த சம்பவத்தின்போது அவர் ட்ரூடோவுடன் இல்லை!