நயன்தாரா திருமணம் போலவே ஹன்சிகா திருமணமும் ஓடிடியில்…

Nilaat month's ago

நயன்தாரா நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் காரணமாக அவர் கையில் இருந்து எந்த செலவும் செய்யவில்லை என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் நயன்தாராவைப் போலவே ஹன்சிகா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹன்சிகா தனது பிசினஸ் பார்ட்னர் சோஹைல் கதூரியா என்பவரை வாழ்க்கை பார்ட்னராக்க வரும் டிசம்பர் 4ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கோட்டையில் இந்த திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பிரபல நிறுவனம் மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நயன்தாரா போலவே ஹன்சிகாவும் செலவே இல்லாமல் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.