ஜெய்லர் பிளாஷ்பேக் காட்சி -நெல்சனை பாராட்டிய ரஜினிகாந்த்

Maniat month ago

சமீபகாலமாக ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை குறிப்பாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியடைந்தது. 


இந்நிலையில் ரஜினி தற்போது ஒரு ஹிட் படத்தை கொடுத்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார், இந்நிலையில் தான் யாரை நான் நிரூபிக்கும் நோக்கத்தில் ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார், விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான படம் பீஸ்ட் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்ற நிலையில் ஜெயிலர் கதையின் மீது இருந்த அதீத நம்பிக்கையின் காரணமாக ரஜினி நெல்சனுக்கு வாய்ப்பளித்துள்ளார்.மேலும் இப்படத்தில் தென்னிந்திய திரையுலகில் 
முன்னணி நடிகர்களாக இருக்கும் மோகன்லால், சீவ்ராஜ் குமார் ஆகியோர் நடித்து வருவது எதிர்பார்ப்பை இரட்டிப்பாக்கியுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது இந்நிலையில் படத்தில் 20 நிமிடங்கள் இடம்பெறும் ஒரு  பிளாஷ்பேக் காட்சியை நெல்சன் சமீபத்தில் எடுத்து ரஜினிக்கு போட்டுக் காட்டியுள்ளார், அந்தக் காட்சியை பார்த்த ரஜினிகாந்த் நெல்சனை வெகுவாக பாராட்டியுள்ளார் மேலும் இப்படத்தின் வெற்றிக்கு இந்த பிளாஷ்பாக் காட்சி மிக முக்கியமான காரணமாக இருக்கும் என ரஜினி கூறியுள்ளார், இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.