லிட்ரோ எரிவாயு சிலிண்டர் பாதுகாப்பானதா? - நிறுவனத்தின் விளக்கம்

#Litro Gas
Pratheesat day's ago

எரிவாயு சிலிண்டர்களின் தரம் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டை லிட்ரோ நிறுவனம் நேற'று  நடத்தியது.

சந்தையில் கிடைக்கும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், லிட்ரோ கேஸ் லங்காவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜனக பத்திரத்ன இதன்போது கருத்து வெளியிட்டார்.

இந்த எரிவாயு மற்றும் சிலிண்டர்கள் அனைத்தும்  சர்வதேச தரநிலைகளின்படி சந்தையில் வெளியிடப்படுவதாக தெரிவித்தார்.

லிட்ரோ கேஸ் லங்கா, இரசாயன மற்றும் செயல்பாட்டு பொறியியலாளர்,  ஜயந்த பஸ்நாயக்க தெரிவிக்கையில்,

கொழும்பில் விளையாட்டு அமைச்சுக்கு அருகில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இடம்பெற்ற சம்பவமே அண்மையில் இடம்பெற்ற முக்கிய சம்பவமாகும்.

அந்த இடத்திற்கு எங்கள் நிறுவனம் எல்பி எரிவாயுவை வழங்கவில்லை. அதற்கு முன் பல சம்பவங்கள் நடந்தன.

அவற்றை ஆய்வு செய்து பார்த்த போது  எரிவாயு சிலிண்டருடன் இணைக்கும் பிற சாதனங்களைப் பற்றி கண்டுபிடித்தோம்.

அது பைப்பாக இருக்கலாம், அடுப்பாக இருக்கலாம். எரிவாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டது எனத் தெரிவித்தார்.