ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் தாமதமாக விநியோகம் செய்யப்படும்!

Prasuat month ago

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 13 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 ப்ரோ மாடல்களுக்கான வினியோகம் ஒத்திவைக்கப்படுகிறது.

ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் வினியோகம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை விட மேலும் தாமதம் ஆகும் என தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் வலைதளத்தில் இரு மாடல்களின் வினியோக தேதி அக்டோபர் 18 இல் துவங்கி அக்டோபர் 25 வரை என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

 அமெரிக்கா மட்டுமின்றி ஐக்கிய ராஜ்ஜியத்திலும் புதிய ஐபோன்களின் வினியோகம் தாமதமாகி இருக்கிறது. நான்கு புதிய ஐபோன்களிலும் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. ப்ரோ மாடல்களில் 120 ஹெர்ட்ஸ் சூப்பர் ரெட்டினா எக்ஸ்.டி.ஆர். ப்ரோமோஷன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மாடல்களில் கிடைக்கின்றன. இதன் ப்ரோ மாடல்கள் 1 டிபி மெமரி கொண்டிருக்கின்றன. ஐபோன்களில் இத்தகைய மெமரி வழங்கப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.