மாடுகள் களவாடப்பட்டு இறைச்சியாக்கப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு!

Prabhaat day's ago

நயினாதீவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக மாடுகள் களவாக பிடிக்கப்பட்டு இறைச்சிக்காக அறுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என கால்நடை வளர்ப்போர் கவலை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பல முறை நயினாதீவு உப பொலிஸ் பிரிவில் முறையிட்டும் எந்த நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர்.

சுமார் 5 கிலோ கிராம் நிறையுடைய மாட்டிறைச்சியுடன் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) ஒருவரை மடக்கிப் பிடித்த பொது மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தும் எவ்விதமான சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் மண்ணின் புனிதத்தை பேணுவதுடன், கால் நடைவளப்பாளர் மேல் கரிசனை காட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.