"18 வயது இளைஞரை நான் சுட்டுக் கொன்றேன்" - நைக் ஜோர்டான் பிராண்டின் தலைவர் பேட்டி

Prasuat month ago

'1965-இல் 18 வயதான இளைஞர் ஒருவரை நான் சுட்டுக் கொன்றேன். நான் கொன்றவரின் பெயர் எட்வர்டு வொயட். அப்பாவியான எனது நண்பர் ஒருவரை எதிரணியினர் கொலை செய்துவிட்டனர். அதற்கு பழி தீர்க்கும் நோக்கில் அந்த கொலையை செய்தேன். இரு பிரிவுகளுக்கு இடையே இருந்த முன்விரோதம் இதற்கு காரணம். அப்போது எனக்கு 16 வயது தான்' என ஸ்போர்ட்ஸ் Illustrated பத்திரிகைக்கு பேட்டிக் கொடுத்துள்ளார் நைக் ஜோர்டான் பிராண்டின் தலைவர் லேரி மில்லர்.

அந்த குற்றத்திற்காக தனது பதின் பருவத்தின் பிற்பாதியையும், 20-களையும் சிறையில் கழித்திருந்தார் மில்லர்.

'நாங்கள் எல்லோரும் அப்போது மது அருந்தி இருந்தோம். எனக்கு போதை அதிகமாக இருந்தது. எனது குற்றப்பின்னணியை எனது நண்பர்கள், சக பணியாளர்கள் என பலரிடமும் மறைத்து வந்தேன். இப்போது எனது மனதை திறந்து இதை நெருக்கமானவர்களிடம் மட்டும் சொல்லி வருகிறேன்.

நான் அந்த தவறை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் அதற்கு சென்று அதை தவிர்ப்பேன். ஆனால் அது அமையப்போவதில்லை. அதனால் இனி இது போன்ற துயரம் யாருக்கும் நடக்கக் கூடாது என்பதில் எனது கவனத்தை வைத்துள்ளேன். படிப்பில் ஆர்வம் உள்ள மாணவன் நான். ஆசிரியர்களிடத்திலும் நல்ல மாணவன். ஆனால் நான் எனது 13 வயதில் சேரக் கூடாத இடத்தில் சேர்ந்த நட்பு எனக்கு கேடாய் அமைந்தது' என தெரிவித்துள்ளார்.