என்னிடம் கனடா பாஸ்போர்ட் இருக்கிறது ஆனால் நான் இந்தியன் தான் - நடிகர் அக்ஷய்குமார்

Prasuat month ago

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் குடியுரிமை தொடர்பில் அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் அவரே முதல் தடவையாக மனம் திறந்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, “நான் இந்திய குடிமகன். இந்தியனாகத் தான் இருப்பேன். ஒரு காலத்தில் என் திரைப்படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன.

அப்போது கனடா நாட்டிற்கு செல்லலாம் என்று தீர்மானித்து அந்நாட்டின் கடவுச்சீட்டை பெற்றேன். அங்கு சென்று வேலை பார்க்கலாம் என்று நினைத்தேன். கனடாவில் என் நண்பர் இருக்கிறார். அவர் இந்திய நாட்டில் உன்னால் வெற்றியடைய முடியவில்லை எனில் இங்கு வந்துவிடு என்று கூறினார்.

இந்தியாவிலிருந்து நிறைய பேர் கனடா நாட்டிற்கு செல்வதுண்டு. எனினும் அவர்கள், இந்திய மக்கள் தான். எனவே, இந்திய நாட்டில் என் தலைவிதி உதவவில்லை எனில் வேறு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்து தான் கனடா நாட்டிற்குச் சென்றேன். அந்த நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்.

குடியுரிமை கிடைத்து விட்டது. எனினும், அதன் பின் தொழிலில் வெற்றி கிடைத்ததால், இந்திய நாட்டிலேயே இருக்க தீர்மானித்துவிட்டேன். அதன் பிறகு கனடா நாட்டிற்கு செல்வது பற்றி நினைக்கவில்லை. நான் கனடா நாட்டின் கடவுச்சீட்டு வைத்திருந்தாலும், இந்திய நாட்டில் வரி செலுத்துவதாக கூறியிருக்கிறார். என்னை பற்றி பேசுபவர்களுக்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நான் இந்தியன். எப்போதும் இந்தியனாகவே இருப்பேன்.

இந்தியனாக இருந்து கொண்டு, நான் இந்தியன் தான் என்று அனைவருக்கும் நிரூபிக்க வேண்டிய நிலையில் இருப்பது வேதனையை தருகிறது என்று கூறியிருக்கிறார்.