இரவு சாப்பாட்டிற்கு மரக்கறி பாஸ்தா செய்வது எப்படி? | Vegetable Pasta Recipe !

#Cooking #dinner #meal
Kesariat month's ago

தேவையானவை

  •  பாஸ்தா - அரை கிலோ
  • குடை மிளகாய் - மூன்றிலும் பாதியளவு (சிவப்பு, மஞ்சள், பச்சை)
  • காரட் - ஒன்று
  • பச்சை பட்டாணி (புரோசன்) - அரை டம்ளர்
  • சோளம் (புரோசன்) - அரை டம்ளர்
  • ஸ்பிரவுட்ஸ் - 10
  • செத்தல் மிளகாய் - 4
  • பெரிய வெங்காயம் - ஒன்று
  • உள்ளி, இஞ்சி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
  • சோயா சாஸ் - 2 மேசைக் கரண்டி
  • ஸ்வீட் சில்லி சாஸ் - ஒரு மேசைக் கரண்டி
  • உப்பு - தேவைக்கு
  • எண்ணெய் - வதக்க

செய்முறை :

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்ரா மூழ்கக் கூடிய அளவிற்கு தண்ணீர் எடுத்து நன்கு கொதிக்க விடுங்கள்,
  2. கொதித்ததும் உப்பு சேர்த்து பாஸ்ராவை போட்டு ஒரு மேசைக் கரண்டி எண்ணெய் அல்லது மாஜரீன் போடவும். 
  3. பாஸ்ரா அவிந்ததும் (8-10 நிமிடங்கள்) வடித்து, பின் குளிர்நீர் விட்டு வடித்து, ஒரு தட்டில் பரவி வையுங்கள்.
  4. மரக்கறி களை ஓரளவு சிறிய துண்டுகளாக வெட்டி கொஞ்சம் உப்பிட்டு வையுங்கள். 
  5. பச்சை பட்டாணி, சோளம் இரண்டையும் குளிர் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். மிளகாயை மூன்று அல்லது நான்கு துண்டுக ளாக வெட்டி, விதைகளை வெளியே கொட்டி விடவும். 
  6. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி, இரண்டையும் சேர்த்து ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வதக்கவும்.
  7. வதங்கியதும், உள்ளி, இஞ்சி பேஸ்ட் சேர்த்து கிளறி, மரக்கறி களை கொட்டி பிரட்டி, 2 நிமிடங்களுக்கு மூடி விடவும். பின்னர் சோளம், பட்டாணி சேர்க்கவும். மெதுவாக பிரட்டி விடவும். 
  8. காரட் அவிந்த பதம் வந்ததும், பாஸ்ராவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பிரட்டவும். இப்போ சோயா சாஸ் சேர்த்து பிரட்டி, உப்பைச் சரி பார்த்துக் கொள்ளுங்கள். குக்கரால் இறக்கி ஸ்வீட் சில்லி சாஸ் சேர்த்து விடுங்கள்.