சுவையான செட்டிநாடு முருங்கைக்காய் மட்டன் மசாலா செய்வது எப்படி?

#Cooking #Mutton #curry
Kesariat month's ago

தேவையான பொருட்கள்

 • முருங்கைக்காய் - 2
 • பெரிய வெங்காயம் - 100 கிராம்
 • கிராம்பு - 2
 • இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
 • பட்டை - 1 துண்டு
 • தேங்காய்த் துருவல் - ½  கப்
 • சோம்பு - அரை டீஸ்பூன்
 • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
 • கசகசா - ஒரு டீஸ்பூன்
 • காய்ந்த மிளகாய் - 10
 • முழு மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
 • சீரகம் - ஒரு டீஸ்பூன்
 • மிளகு - ஒரு டீஸ்பூன்
 • எண்ணெய் - தேவையான அளவு
 • உப்பு - தேவையான அளவு
 • கொத்தமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை

 1. முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 
 2. தேங்காயை துருவி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். 
 3. காய்ந்த மிளகாய், முழுமல்லி (தனியா), சீரகம், கசகசா, மிளகு, சோம்பு,பட்டை,கிராம்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும்.
 4. அடுப்பில் குக்கரை வைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
 5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
 6. அடுத்து அதில் அரைத்த மசாலாவைச் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலா பச்சை வாசனை போனதும்  வேக வைத்த மட்டன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
 7. பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும்.  
 8. முருங்கை காய் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்துக் கலந்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும்.