பாரை மீன் பூண்டு மசாலா சமைப்பது எப்படி? | Tin Fish Garlic Masala Recipe !
#Cooking #Fish #curry
at month's ago

Advertisment
என்னென்ன தேவை?
- பாரை மீன் - 500 கிராம்
- சின்ன வெங்காயம்- 100 கிராம்
- தக்காளி - 100 கிராம்
- பூண்டு - 50 கிராம்
- புளி கரைசல் - 1/4 கப்
- தேங்காய் பால்- 1/2 கப்
- சிவப்பு மிளகாய் - 8
- மல்லி - 1 ஸ்பூன்
எப்படி செய்வது?
- கடாயில் வர கொத்த மல்லி, மிளகு, சோம்பு, சிவப்பு மிளகாய் சேர்த்து வறுத்து மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு, கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி கிரேவி பதத்திற்கு ஆனதும்
- அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மீனை போட்டு அதில் அரைத்த மசாலாவை கலந்து கிளறி கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து மூடி வைத்து வேக விட்டு பின்னர்
- தேங்காய் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மீண்டும் 5 நிமிடத்திற்கு வேக விட்டு இறக்கினால் மீன் பூண்டு மசாலா தயார்.
Advertisment
இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டு செய்திகள், இராசிபலன்கள் போன்றவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எமது வட்சப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். குழுவில் இணைய இங்கே கிளிக் பண்ணவும்..