எண் 2 இல் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்?

#Astrology
Kesariat day's ago
  • இந்த 2ம் எண்ணைப் பற்றி அனைத்து நூல்களும் மக்களை தேவையில்லாமல் பயப்படுத்துகின்றன. உண்மை அதுவன்று.
  • பெரும் மரங்கள் சாய்ந்தாலும் நாணல் மட்டும் நிலைத்து நிற்கும். ஒவ்வொருவர் வாழ்விலும் புயல் (சோதனைகள்) என்பது நிச்சயம் ஏற்படும்.
  • அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டு விடும்போது இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்து கொடுத்து, முன்னேறி விடுவார்கள். அம்பாளின் அருள் பெற்ற எண் இது.
  • பகலுக்கு இராஜா சூரியன் என்றால் இரவுக்கு ராணி சந்திரன். சூரியன் தந்தைகாரன் சந்திரன் மாதாகாரன்.
  • எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. இவர்கள் ஓரளவு தடித்த தேகத்தினர்தாம். இதில் பிறந்த ஆண்கள் சுருட்டை முடியையும், பெண்கள் நீண்ட முடியையும் கொண்டவர்கள்.
  • இவர்கள் எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கிறார்களோ, பல சமயங்களில் அதைவிடக் கடின சித்தராகவும் மாறிவிடுவார்கள்.
  • மனத்தினால் செய்யும் தொழில்களில் (கற்பனை, கவிதை, திட்டமிடுதல் போன்றவற்றில்) மிகவும் விருப்பமுடன் ஈடுபடுவார்கள்.
  • இவர்களுக்கு விட்டுக் கொடுக்கும் குணம் உள்ளதால், மக்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள். கற்பனை கலந்து கவர்ச்சியுடன் பேசுவதால் இவர்களுக்கு மக்களாதரவு உண்டு.
  • பெரும்பாலோருக்கு முன்னோர்கள் சொத்துக்கள் இருக்கும். இந்த எண்ணின் ஆதிக்கம் குறைந்தவர்கள் வீண்பிடிவாதம் கொண்டு தங்கள் வாழக்கையைத் தாங்களே கெடுத்துக் கொள்வார்கள்.
  • நீதிமன்ற வழக்குகளிலும் சிக்கலை தந்து விடும். முன்னோர் சொத்துக்களையும் இழக்க நேரிடும். மனதில் நிம்மதி இருக்காது.
  • இவர்களின் வெற்றிக்கும் அல்லது தோல்விக்கம் ஒரு பெண்ணே காரணமாக இருப்பாள். காரணம் இவர்களுக்குச் சந்தேகம் குணம் அதிகம் உண்டு.
  • இதனால் முழுமையாக யாரையும், நம்பாமல் திரும்பத் திரும்ப மற்றவர்களடன் சந்தேகம் கொள்வதால்தான்.
  • இவர்களுக்கு எதிரிகள் உருவாகின்றனர். எதையும் பதட்டத்துடனும், ஒருவித சோம்பலுடனும் அணுகும் குணத்தினையும் மாற்றிக் கொண்டால் இவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள்.
  • முக்கிய காரியங்கள் எவற்றையும் சட்டென முடிக்காமல் காலத்தைக் கழித்து விட்டு, பின்பு அவசரம் அவசரமாகச் செய்து முடிபார்கள்.
  • ஒரு மாதத்தின் இறுதியில்தான் அவசர அவசரமாக உட்கார்ந்து அந்தந்த மாதத்தின் வேலையை முடிப்பார்கள். தங்களது வாக்குறுதிகளை இவர்கள் காப்பாற்றுவது மிகவும் சிரமம்.
  • திருநெல்வேலி சென்றவுடன் அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்வார்கள். ஆனால் அனுப்ப மாட்டார்கள்.
  • சந்திர ஆதிக்கம் நன்முறையில் அமைந்திருந்தால் நல்ல திட்டங்கள் போட்டும் அவற்றில் வெற்றியும் அடைந்து விடுவார்கள். (உ&ம்) தேசத்தந்தை மகாத்மா காந்தி.
  • தங்களிடம் பல திறமைகள் இருந்தும் துணிந்து செயல்பட விருப்பப்பட மாட்டார்கள். இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள்.
  • காலையில் சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். ஆனால் மாலைக்குள் ஊக்கம் குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.

பத்தாவது முறை தடுக்கி விழுந்தவனிடம்
பூமித்தாய் முத்தமிட்டு சொன்னது,
மறந்துவிடாதே நீ ஒன்பது முறை
எழுந்து நின்றவன் என்று

  • கவிஞர் கவிதாமணியின் இந்த புதுக்கவிதையின் வரிகளை மறக்காமல் கடைப்பிடித்தால் இவர்களது வாழ்வில் இன்பம் நிச்சயம்.

இவர்களது நோய்கள்

  • அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களாதலால், வயிற்றுக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படும். சந்திரனின் ஆதிக்கம் குறையும்போது சிறுநீரகக் கோளாறுகள், மனச்சோர்வு, மூலவியாதிகள் தோன்றும் இவர்களுக்கு நீர்த் தாகம் அதிகம் உண்டு.
  • தண்ணீர், காபி, டீ மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை மிகவும் விரும்புவார்கள். எனவே, இவர்கள் குடிப் பழக்கத்திற்கு மட்டும் ஆளாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அதற்கு அடிமையாகி விடுவார்கள்.
  • பூசணி, பறங்கி, வெள்ளைப்பூசணி, முட்டைக்கோசு ஆகியவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சளித் தொந்தரவுகளும் அடிக்கடி ஏற்படும்.

எண் 2 சிறப்பு பலன்கள்

  • எண் 2 என்பது மனோகாரகனான சந்திரனுக்கு உரியதாகும். இந்த எண் பெண் தன்மை கொண்டது. எனவே, இந்த எண் ஆதிக்கத்தில் பிறப்பவர்களுக்கு மனோ பலமும், கற்பனைத் திறனும் இயற்கையிலேயே உண்டு.
  • எண்ணின் பலம் குறைந்தால் தன்னம்பிக்கைக் குறையும், மனதில் பல வீண் ஐயங்களும் ஏற்படும். உலகத்தின் கவிஞர்கள் இவர்களே.
  • தங்களின் காரியங்களை பல கோணங்களில் சிந்தித்த பின்பே தொடங்குவார்கள். இதனால் காரிய தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
  • இவர்களது மனத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது. எனவே, இவர்களைக் கற்பனைவாதிகள் என்று உலகம் சொல்கிறது.
  • பேசிக் கொண்டிருப்பதில் இன்பம் காண்பவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களில், உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார்கள். சிலர் மிகவும் கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பார்கள். வேறு சிலரோ பெரும் செலவாளிகளாக இருப்பார்கள்.
  • மனச்சோர்வு வராமல் இவர்கள் பார்த்துக் கொண்டால் செயல்களில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய அழகிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு.
  • புதிய புதிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு. புதிய புதிய எண்ணங்களும், திட்டங்களும் இவர்களுக்குத் தோன்றும். இவர்கள் தண்ணீரால் (பஞ்சபூதம்) குறிக்கப்படுகிறார்கள்.
  • எனவே, பெரும் பிடிவாதம் கொண்ட மனிதாராகவோ, அல்லது பயந்து நடுங்கும் கோழைகளாகவோ இருப்பார்கள்.
  • எனவே, இவர்கள் தங்களது குறைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பெரும் ஓவியர்கள், கலைஞர்கள், பாடகர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்தான்.
  • அடுத்தவர்களைக் குற்றம் சொல்லும் குணத்தையும், வீண் பேச்சையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • இவர்களுக்குத் துன்பங்கள் தொடர்ந்து வரும்போது தற்கொலை எண்ணம்கூடத் தோன்றும். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மிகவும் பிரியமுள்ளவர்கள்.
  • தண்ணீரில் சிலருக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எப்படியும் வெளியூர்த் தொடர்பு, வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டு அவற்றின் மூலம் பல நன்மைகள் அடைவார்கள்.
  • அடுதவர்களுக்குப் பெரிதாக யோசனை சொல்வார்கள். ஆனால் தங்கள் அளவில் குறைவாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். தெய்வ பக்தியும் உண்டு.
  • தங்களின் செயல்கள் மீதே இவர்களுக்கு பல ஐயங்கள் தோன்றும். சரியாகத் தான் செய்தோமா? இல்லையா? என்று பல தடவை குழம்புவார்கள்.
  • இவர் உணர்ச்சி மயமானவர்கள். கோபம், பிடிவாதம், ஆத்திரம் போன்ற குணங்கள் உண்டு. இக்குணங்களைத் தவிர்த்துக் கொண்டால்தான் மக்களின் மத்தியில் செல்வாக்கு அடையலாம்.
  • இந்த எண்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் நிறைய உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும்.
  • பொதுவாக இவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும். ஒரு சிலருக்கு மிக இளவளதிலேயே திருமணம் நடக்கலாம். பெரும்பாலும் பெண்களால் உதவிகள் கிடைக்கும்.
  • சில பெண்களால் இவர்கள் வாழ்க்கையில் பாதிப்பும் உண்டு. காதல் செய்வதில் மிகவும் விருப்பம் உண்டு. வரிவரியாகக் கற்பனைகளை எழுதுவார்கள்.
  • ஆனால் சந்தேகக் குணம் நிறைந்துள்ளதால் திருமண வாழ்வு பாதிக்கப்படும். இவர்கள் தியானம், யோகாசனம் போன்ற இயற்கையான பயிற்சிகளை மேற்கொண்டால் வலுவான மனமும், அலை பாயாத எண்ணங்களும் ஏற்படும்.
  • விளையாட்டுக்களில் நாட்டம் செல்லும். உள் அரங்க விளையாட்டுக்களை மிகவும் விரும்புவார்கள். எண் பலம் அதிகமானால் இராமனாக இருப்பார்கள். குறைந்தால் இராவணனாக இருப்பார்கள்.
  • தன்னம்பிக்கை பொதுவாகக் குறைவாகவே இருக்கும். பல பொருள்களில் ஒரே நேரத்தில் மனம் செலுத்துவதால் எதையும் அழமாகச் செய்யத் தெரியாது.
  • எந்த நேரத்திலும் வாழ்க்கையில் இடறி விழுந்து விடுவோம் என்ற ஐயம் இருக்கும். எனவே, எச்சரிக்கை உணர்வும் அதிகம் உண்டு.
  • வாழக்கையில் ஆபத்தான முடிவை (ரிஸ்க்) எடுக்கத் தயங்குவார்கள். அலுவலகத்திலும், வீட்டிலும் எந்தப் பணியையும் முழுமையாக மற்றவர்களை நம்பி ஒப்படைக்க மாட்டார்கள்.
  • சஞ்சல சுபாவம், சபல சித்தமும் இவர்களுடன் கூடப் பிறந்தவைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், காரணமற்ற கவலைகளினால் தங்களை வருந்திக் கொள்வார்கள்.
  • நடக்கக்கூடாது, நடக்க முடியாத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனை செய்து கொண்டு, இவை நடந்துவிடுமோ என்று எண்ணி எண்ணிக் குழம்புவார்கள்.
  • எந்த அளவுக்குத் துணிச்சலாகப் பேசுகிறார்களோ, அந்த அளவுக்கு மனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கெனத் தனித்த பண்போ, பழக்கவழக்கமோ இருக்காது.
  • எப்போதும் மற்றவர்களை பார்த்து, அவர்களிடன் நடை உடைகளைப் பின்பற்றுவார்கள். இதனால் இவர்களுடைய இயல்பும், பழக்கவழக்கங்களும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்.
  • தாங்கள் எடுக்கும் முடிவினையும் கூட அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். எதைப் பற்றியும் விவாதம் செய்வதில் மட்டும் மிகவும் ஈடுபாடு உண்டு.

முக்கிய ஆலோசனை

  • விதி எண் 2 ஆக வரும் அன்பர்கள் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலிகள். திருமணம் ஆனவுடன்தான் அம்பாளின் அனுக்கிரகத்திற்கு உட்படுவார்கள்.
  • வசதியுடன் மனைவி அல்லது மனைவி வந்தவுடன் வேலை, வாழ்க்கையில் முன்னேற்றம் ஆகியவை இந்த எண்காரர்களுக்கு ஏற்பட்டு விடும்.
  • இவர்களும் பிறந்த ஊரை விட்டு வெளியூர் சென்று தொழில், வியாபாரம் அமைந்தால்தான் நல்ல தொழில் முன்னேற்றம், நல்ல இலாபங்கள் அடையலாம்.
  • இவர்கள் நடையில் எப்போதும் வேகம் உண்டு. செல்வத்தைச் சேர்ப்பதில் மிகவும் ஆசை உடையவர்கள்.
  • உலக சுகங்களை அனுபவிப்பதிலும் மிகவும் நாட்டம் உண்டு. அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் குணம் உள்ளவர்கள்.
  • மனோவசியம் மற்றும் மந்திர தந்திரங்களாலும் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு.
  • தாய்மையின் இயல்பான பாசம், குடும்பப்பற்று, தேசபக்தி, ஊர்ப்பற்று, தமிழ்ப்பற்று ஆகியவை உண்டு.
  • 2ம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் நன்றாகப் பிரகாசிக்கச் சூரியனின் உதவி தேவை.
  • சூரியன் இல்லையென்றால் சந்திரனுக்குப் பிரகாசமில்லை. மதிப்புமில்லை. அதைப் போன்றே 2ம் எண் வருகிற அன்பர்கள் (பிறவி எண் அல்லது விதி எண்) ஆலோசகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.
  • அவர் அடுத்த மதம் அல்லது இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் இவர்களை அவர் தமது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்.
  • சரியான ஆலோசகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்த பின்பு, அவரின் ஆலோசனைப்படியே தங்களின் காரியங்களைச் செய்து வரவேண்டும்.
  • இதனால் மனதில் தன்னம்பிக்கையும், திட்டமிட்டபடி செயல்களும் உருவாகும். வெற்றிகள் தொடரும்.
  • ஆலோசகர் கிடைக்காவிட்டால் அவரவர்களின் இஷ்டப்பட்ட இறைவனின் சன்னிதானம் சென்று (தட்சிணாமூர்த்தி முன்பு சிறப்பானது) உங்களது பிரச்சினைகளைச் சொல்லி இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.
  • உங்களுக்கு இறைவனின் கருணை இயற்கையிலேயே மிக உண்டு. இதன் மூலம் நல்ல வழித் தூண்டுதலும், செயல் முன்னேற்றமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
  • சந்தர்ப்பங்கள் இவர்களைத் தேடி வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இதைவிட்டு விட்டு இவர்கள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி, முழு மனதுடன் செயலாற்றினால் எளிதில் இவர்களை வெற்றி மகள் தேடி வருவாள்.

குடும்ப வாழ்க்கை

  • இந்த எண்காரர்களுக்குக் குடும்ப வாழ்க்கை சிறப்பாகச் சொல்லப்படவில்லை. சிறிய பிரச்சினைகளையும் கூடப் பெரிதுபடுத்திக் கொண்டு, மனைவிடம் சண்டை போடுவார்கள்.
  • குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். குழந்தைகளாலும் நிம்மதி குறைவு. எனவே, தங்களுக்கு வரும் மனைவியின் பிறந்த எண்களை முன்பே நன்முறையில் தேர்வு செய்து கொண்டு, திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
  • இப்படிச் செய்தால், இவர்களும் ஆனந்தமான வாழ்க்கை வாழலாம். இவர்கள் தங்களது குடும்பத்தில் உள்ள மனைவி, குழந்தைகளை நம்ப வேண்டும்.
  • அவர்களுடன் ஒத்துழைத்து, அவர்களிடம் அன்பு காட்டினால், பின்னர் அவர்களால் நல்ல இன்பமான வாழ்க்கை அடையலாம்.
  • எந்த நிலையிலும், குடும்ப நிர்வாகத்தைத் தங்களிடமே வைத்துக் கொள்ளலாமல், மனைவி அல்லது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டால், பாதிக் குழப்பங்கள் வராமல் தடுத்துவிடலாம்.

உடல் அமைப்பு

  • இவர்கள் உயரமானவர்களாக இருப்பார்கள். சந்திரனின் வலிமை குறைந்தால், நடுத்தர உயரமாக அல்லது குள்ளமாக இருப்பார்கள்.
  • நல்ல சதைப் பற்றுள்ள உடம்பை உடையவர்கள். உடல் பலம் இராது. உருண்டையான முகமும், அகன்ற கண்களும், கனத்த இமைகளும் உண்டு. பற்கள் சீராக இருக்கா. நொந்தி விழுவதை எதிர்பார்க்கலாம்.

அதிர்ஷ்ட நாட்கள்

  • ஒவ்வொரு மாதத்திலும் 7,16, 25 ஆகிய தேதிகளும், எண் 7 வரும் தினங்களும் மிகவும் அதிர்ஷ்டமானவை.
  • 2, 11, 20, 29 தேதிகளிலும் நடுத்தரமான நன்மையே நடக்கும். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் சாதமான பலன்கள் நடைபெறும். 8 மற்றும் 9 எண்கள் இவர்களுக்கு கெடுதல் செய்பவையே. ஒவ்வொரு மாதத்திலும் 8, 9, 18, 26, 17, 27 ஆகிய தேதிகள் துரதிர்ஷ்டமானவை. புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
  • அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்
  • வெள்ளி நன்மை தரும். வெள்ளியுடன் தங்கத்தையும் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை அடையலாம்.
  • முத்து, சந்திர காந்தக்கல், வைடூர்யம் ஆகியவை அணிந்தால் அதிர்ஷ்ட பலன்களை அடையலாம்.
  • பச்சை இரத்தினக்கல், ஜேட் என்னும் கற்களையும் அணியலாம். நல்ல பலன்களைக் கொடுக்கும்.
  • அதிர்ஷ்ட நிறங்கள்

1. பச்சை கலந்த வர்ணங்களும், லேசான பச்சை, மஞ்சள், வெண்மை நிறங்களும் அதிர்ஷ்டகரமானவை.
2. கருப்பு, சிவப்பு, ஆழ்ந்த நீலம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2ம் தேதி பிறந்தவர்கள்

  • உயர்ந்த இலட்சியத்தை ஏற்றுச் செயல்படுவார்கள். கற்பனைச் சக்தியும் அதிகம் உடையவர்கள். சாந்தமும், அமைதியும் உடையவர்கள்.
  • மக்கள் சீர் திருத்த எண்ணங்கள் உருவாகும். பேச்சு வார்த்தைகள் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்க விரும்புவார்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள், நடிகர்கள் போன்றோர் உருவாகும் நாள் இது. 2ம் எண்ணின் முழு ஆதிக்கமும் கொண்டது.

11ம் தேதி பிறந்தவர்கள்

  • விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு உடையவர்கள். தன்னம்பிக்கையுடன் முன்னேறுவார்கள். தெய்வீக ஆற்றல் உண்டு. வாக்கு பலிதமும் உண்டு.
  • பொது நலத்திற்காகத் தங்களது அறிவைப் பயன்படுத்துவார்கள். இதனால் பல சோதனைகளும் உண்டாகும். தேவைக்கு ஏற்ற பொருளாதாரம் நிச்சயம் உண்டு.
  • நிம்மதியான வாழ்க்கை உண்டு. தங்களது திறமைகளைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டால், பொருளாதார நிலையை மிகவும் உயர்த்திக் கொள்ளலாம். ஆனாலும் மனம் வராமல், தயங்கி நிற்பார்கள்.

20ம் தேதி பிறந்தவர்கள்

  • மற்ற மக்களுக்காக உரிமையுடன் போராடுவார்கள் இவர்களே, ஆனாலும், பேராசை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • சுயநலத்தை விட்டுவிட்டால், பெரும் புகழும், செல்வமும் வந்து சேரும். பல மக்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.
  • கற்பனை வளம் நிறைந்தவர்கள். தங்களது உணர்ச்சிகரமான பேச்சினால், மக்களை வசியம் பண்ணும் ஆற்றல் உண்டு. தன்னம்பிக்கை அதிகம் உண்டு.
  • அது ஆணவமாக மாறாமல் பார்த்துக் கொண்டால் வாழ்க்கை நன்கு அமையும்.

29ம் தேதி பிறந்தவர்கள் 

  • 2ம் எண்ணின் ஆதிக்கம் மிகவும் குறைந்த எண் இது. இதனால் இவர்கள் போராடும் மனோபலம் உடையவர்கள்.
  • பிரச்சினைகளை வாய்ச் சமர்த்தினாலும், தேவைப்பட்டால் வன்முறையில் கூட இறங்கிச் சமாளிக்கத் தயங்க மாட்டார்கள். திருமண வாழக்கை பல பிரச்சினைகள் உடையதாக இருக்கும்.
  • பஞ்சாயத்து வரை சென்று, குடும்பப் பிரச்சினைகள் தீரும். தங்கள் ஆற்றலை நல்ல காரியங்களுக்காகச் செலவிடவில்லையென்றால், இவர்கள் சமூக விரோதியாக மாறவும் வாய்ப்பு உண்டு. சமுதாயத்திற்கே இவர்களால் தொந்தரவு ஏற்படலாம்.
  • சர்வாதிகாரிகள் பலர் இந்த எண்ணில் பிறந்தவர்கள். கடத்தல், கள்ளச் சந்தை போன்றவற்றில் கூட ஈடுபடத் தயங்க மாட்டார்கள்.
  • அதிகாரிகளாக இருந்தால் லஞ்சம், கள்ளக் கையெழுத்து (போர்ஜரி) போன்றவற்றில் ஈடுபடவும் துணிவார்கள்.
  • 29ந் தேதியில் பிறந்த நல்லவர்களால், பல அரிய சாதனைகளும் உலகில் நிகழ்ந்துள்ளன. தங்களுடைய வாழ்க்கைப் பாதையைச் சரியான பாதையில், விடாப்பிடியாக நடந்தால் இவர்கள் மனிதர்களில் மாணிக்கமாவார்கள்.
  • எதிரி மிஞ்சினால் கெஞ்சுவதும், கெஞ்சினால் மிஞ்சுவதும் இவர்களின் சுபாவமாகும். வீறாப்புப் பேச்சும், நல்லவர் போன்ற நடிப்பும் உண்டு.
  • எதற்கும் ஆட்சேபணை எழுப்பும் பிடிவாதமும் உண்டு. கூட்டு எண்ணைப் பொறுத்து வாழ்க்கையின் முடிவு அமையும்.

தொழில்

  • இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில்  உள்ளவர்கள் என்பதால் அதிக கற்பனைத் திறன் இருக்கும். இவர்கள் கதை, வசனம் பாடல்கள் போன்றவற்றை எழுதலாம்.
  • சந்திரன் ஜல ராசி என்பதால் பால் வியாபாரம், குளிர்பான விற்பனை, ஐஸ் தொழிற்சாலை, தூய நீர் தயாரித்தல் போன்றவை இவர்களுக்கு பொருத்தமான தொழிலாக அமையும். நல்ல வருவாயும் உண்டாகும்.
  •  அறிவிப்பாளர் தொழிலும் ஏற்றம் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு கடல் கடந்து சென்று சம்பாதிக்கக்கூடிய யோகமும் அமையும். சிலருக்கு அரசாங்க உத்தியோகங்களும் கிடைக்கப்பெறும்.

நண்பர்கள், பகைவர்கள்

  • இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் கொண்டவர்கள். ஆதலால் எதிலும் குழப்பவாதியாகவே இருப்பார்கள்.
  • யாரிடமும் அவ்வளவு எளிதில் நெருங்கி பழக மாட்டார்கள். அப்படி நெருங்கி பழகிவிட்டால் அவ்வளவு எளிதில் பிரியமாட்டார்கள்.
  •  நண்பர்களுக்காக எதையும் செய்வார்கள். இவர்களுக்கு 1,5 ல் பிறந்தவர்கள் நண்பர்களாகவும், 4,7 போன்ற எண்களில் பிறந்தவர்கள்வர்களிடம் ஒத்துப்போக முடியாதவர்களாகவும் இருப்பார்கள். அதிக இரக்க மனம் கொண்டவர்கள். ஆதலால் நண்பர்களால் சில நேரங்களில் ஏமாற்றப்படுவார்கள்.

பொருளதாரம்

  • இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பணத்தை எந்த விதத்திலாவது சம்பாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.
  • வருமானம் குறைவாக இருந்தாலும் ஆடம்பரமாக செலவு செய்வதால் சேமிப்பு குறைவாகவே இருக்கும்  பிறருக்கு கொடுக்க வேண்டிய  கடன்களை இவர்கள் தவறாமல் கொடுத்தாலும், இவருக்கு வர வேண்டிய பண தொகைகளை வசூலிப்பதில் மிகுந்த சிரமம் உண்டாகும்.
  • பண விஷயத்தால் நெருங்கி பழகுபவர்களிடம் அடிக்கடி மன ஸ்தாபங்கள் உண்டாகும். எப்பொழுதும் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுவதே நல்லது.

பரிகாரங்கள்

சந்திரனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாக இருப்பதால், அந்நாட்களில் துர்க்கா பூஜை செய்தல் நல்லது. வெங்கடாசலபதியையும் வழிபாடு செய்வது மன சஞ்சலங்களை குறைக்கும்.