ஆண்களே உங்கள் விந்தணுக்களை அதிகரிக்கும் அற்புத உணவுகள்..

Nilaat month's ago

ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்கும் இந்தக் காலத்தில் பெண்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம். ஆனால், இன்றைய நவீன முறையில்லாத உணவு பழக்கங்களால் சிக்கல் ஏற்படுகிறது. இதன் காரணமாக, கருவுறுதல் இயற்கை முறையில் நிகழாததால், செயற்கை கருத்தரிப்பு முறையினை நோக்கி பெரும்பாலான தம்பதியினர் செல்கின்றனர். அதிகரித்து வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் 30 அல்லது 40 வயது வரை காத்திராமல், தங்கள் ஆரோக்கியத்தை இளம் வயதிலேயே பேணத் துவங்க வேண்டும்.

ஆண்களின் விந்தணுக்களானது விந்து வெளிப்படும்போது விந்தணுக்குள் வெளிப்படவேண்டும். இதில் பாதி அளவிலேயே 15 மில்லியன் அளவு விந்தணுக்கள் இருக்க வேண்டும். இதிலும் 50% அளவு விந்தணுக்கள் வீரியமிக்கவையாக இருக்க வேண்டும் . இதில் 4 % வீரியம் குறைந்தவையாக இருந்தாலும் பரவாயில்லை. இவை தவிர்த்து வீரியமிக்க விந்துக்களானது கருப்பையில் வேகமாக வீரியத்தோடு ஊர்ந்து செல்லும் அளவுக்கு ஆரொக்கியமானதாக இருக்க வேண்டும். இப்படி இருக்கும் ஆண்களுக்கு குறைபாடில்லை. இதற்கான இயற்கை முறை வழிகள் உள்ளன. அவை என்ன என்று பார்க்கலாம்.

வெந்தயம் எடுத்துக்கொள்ளுதல்:

உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கு இயற்கை தீர்வாக வெந்தயம் நீண்ட காலமாக நம் பயன்பாட்டில் உள்ளது, மேலும் இது விந்தணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.  இதனால் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமடைகிறது. 

வைட்டமின் டி:

வைட்டமின் டி ஆனது விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு கால்சியல் அளவையும் விந்தணுவில் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே ஆண்களின் உடலில் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரித்து குழந்தை பேரின்மையை தடுக்க வைட்டமின் டி அவசியம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன. தேவையான அளவு வைட்டமின் டி உடலில் இருக்கும் போது விந்தணுக்கள் வலிமையடைகின்றன. 

ஆன்டி-ஆக்சிடன்ட் உள்ள உணவுகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கலின் எண்ணிக்கையை குறைக்க உதவுகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் வீக்கத்தை ஏற்படுத்தும், இதன் விளைவாக பல நோய்கள் மற்றும் சிக்கல்கள் ஏற்படலாம். உங்கள் உணவில் ஆக்ஸிஜனேற்ற உணவுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

நல்ல கொழுப்பு உணவுகள் சேர்த்தல்:

ஆண்களின் உடலில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவில் இருந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் வடிவமும் தரமாக இருக்கும் என்கிறது ஆய்வு. 

பருப்பு வகைகள்:

லென்டில்ஸ் எனப்படும் பருப்பு வகைகள் உடலுக்கு அதிக போலிக் அமில சத்துக்கள் கிடைக்கும். இது விந்து அணு ஆரோக்கியம் மற்றும் நீந்து சக்தியை அதிகரித்து, ஆண்மையை அதிகரிக்க உதவுகின்றன. 

புளுபெர்ரி பழங்கள்:

புளுபெர்ரி பழ வகைகளால் விந்து அணுக்களின் வடிவம், அளவு, ஆரோக்கியம் மற்றும் எண்ணிக்கை மேம்படுகிறது

தக்காளி:

தக்காளியை உணவில் அதிகமாக சேர்த்து கொள்வது, ஆண்களின் விந்து அணுக்களின் நீந்து சக்தியை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


டார்க் சாக்லேட்டுகள்:

இவற்றில் உள்ள சில சத்துக்கள் விந்து அணுக்களின் ஆரோக்கியம் மற்றும் விந்து அணுக்களின் நீந்து சக்தி உள்ளிட்டவற்றை அதிகரிக்க உதவுவதாக கூறப்படுகிறது.

விந்தணுக்கள் குறைபாட்டை சந்திக்காமல் இருக்கவும் விந்தணுக்களை பலமாக்கி வேகத்தை அதிகரிக்கவும் இந்த மாதிரியான உணவுகளை எல்லாம் தவிர்க்காமல் எடுத்துகொள்வது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.