55 அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் தீர்மானம்

#Sri Lanka #Lanka4 #government #Sri Lanka President #Colombo #sri lanka tamil news
Prabhaat month ago

அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அரச அலுவலகங்களை மூட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

திட்ட அலுவலகங்கள் , திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் முறையில் அமைச்சரவை குறித்த  தீர்மானத்தை எட்டியுள்ளது .

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .

முன்னாள் அமைச்சின் செயலாளர் எச்.டி. கமல் பத்மசிறி தலைமையில் ஜனாதிபதியினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டது. குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 32 திட்ட அலுவலகங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது