அவுஸ்திரேலியாவில் ரூ.11.25 லட்சத்திற்கு விலை போன ஆடு!

#world news #Australia
Kesariat day's ago


ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஒரு  சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஆண்ட்ரூ மோஸ்லி எனும் நபர் காட்டு ஆடுகளை மேய்த்து விற்று வருவதை தொழிலாக கொண்டவர். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கோபார் நகரத்தில் மரக்கேஷ் என பெயரிடப்பட்டுள்ள ஆட்டுக்கிடாவை 11.25 லட்ச ரூபாய்க்கு (21,000 ஆஸ்திரேலிய டாலர்)  அவர் வாங்கியுள்ளார்.

முன்னதாக 12 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புக்கு ஒரு ஆடு விலை போனதே சாதனையாக இருந்தது. இப்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டது.

இது குறித்து ஆண்ட்ரூ மோஸ்லி கூறுகையில், “மிக குறைந்த அளவிலேயே காட்டு ஆடுகள் உலகில் உள்ளன. ஆட்டிறைச்சிக்காக அதிக அளவில் காட்டு ஆடுகள் கொல்லப்படுவது இதற்கான காரணமாக இருக்கிறது. அதனால் தான் இவ்வளவு அதிக விலைக்கு இந்த ஆடு விற்பனை ஆகியுள்ளது”  என கூறியுள்ளார். 

விவசாயிகள் பெரும்பாலும் சொந்தமாக ஆடுகளை வளர்த்து அவற்றின் மூலமாக இனப்பெருக்கம் செய்ய வைத்து ஆடுகளின் பெருக்கத்தை அதிகரித்து வருகின்றனர். இந்த முரட்டு ஆட்டுக்கிடா இனப்பெருக்கம் செய்யும் திறன் அதிகம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. எனவே, தான் இதை அவர் வாங்கியுள்ளதாக கூறியுள்ளார். 

மோஸ்லி தனது மிகப்பெரிய பண்ணையில் இப்போது புதிய வரவாக இந்த ஆட்டை சேர்த்துள்ளார். இவர் இந்த ஆட்டைக்கொண்டு பெரிய செல்வந்தராகிராரா என்று தான் பொறுத்திருந்து பார்ப்ப