பிரான்ஸில் எரிபொருள் விலை ஏற்றம்!

#world news
Kesariat day's ago

பிரான்ஸில் எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகனதாரிகள் லீட்டருக்கு 2 யுரோக்கள் செலவாகிறது என அறிவிக்கின்றனர்.

பாரிஸில் உள்ள மிகவும விலை உயர்ந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஒரு லீட்டர் பெற்றோல் 1.99 யுரோக்களுக்கு விற்கப்படுகிறது.

பிரான்ஸின் மேற்கு கடற்கரையில் உள்ள வெண்டேயில் விலைக்குறியீடுகள் வாசலைக்கூட கடந்துவிட்ட நிலைகாணப்படுகிறது. இந்த  விலை ஏற்றம் நாடு முழுவதும் பரந்து காணப்படுகிறது

பிரான்ஸில் பிரபலமான பெற்றோல் வகை E10 unleaded petrol. 10வீதம் எதனோல் கொண்டது. இது ஒரு வருட இடைவெளியில் 18 சதவிதத்திற்கும் அதிக அதிகரிப்பை காட்டுகிறது.

95 பெற்றோல் ஒரு லீற்றருக்கு சராசரியாக 1.59 யுரோக்கள் செலவாகும். 98 பெற்றோல் 1.65யுரோக்கள் ஆக உள்ளது. பொதுவாக பிரான்ஸில் டீசல் 1.21-1.44 யுரோக்கள் வரை உள்ளது.