இனி ஒவ்வொரு மாதமும் நடக்கும்...ரசிகர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு!

Nilaat month's ago

தளபதி விஜய் அவ்வப்போது தனது ரசிகர்களை சந்தித்து வருவார் என்பதும் விஜய் மக்கள் இயக்கம் குறித்த விவரங்களை கேட்டுத் தெரிந்து கொள்வார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று விஜய் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் நேரடியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்திக்க இருப்பதால் இந்த சந்திப்பின் போது ஒரு சில முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இனிமேல் மாதத்திற்கு ஒருமுறை ரசிகர்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்க வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.