பாகிஸ்தான் நாட்டை உலுக்கிய வெள்ளம் - அரசு மீது அதிருப்தியில் பொதுமக்கள்

#Pakistan #Flood
Prasuat day's ago

பாகிஸ்தான் நாட்டில் எதிர்பாராத விதமாக கடுமையான வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளின் இப்போது மீட்பு  பணியில் சரிவர ஈடுபடாத பாகிஸ்தான் அரசு மீது அந் நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்டன் ஆய்வின் முடிவுகள் இந்த வாரம் வெளியானது.

அதன் அடிப்படையில் சுமார் 14 மாவட்டங்களில் கடுமையாக வெள்ளம் பாதித்த 38 இடங்களில் இருக்கும் பொதுமக்கள் தங்களுக்கு அடிப்படை வசதி கூட அரசு செய்து தரவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

வெள்ளம் காரணமாக இப்பகுதியை சேர்ந்த 92 % மக்கள் தங்களது கிராமங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இதனை தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்ட ஆறு வாரங்களுக்கு பிறகு கூட பல குடும்பங்கள் இன்னமும் சாலையோரங்களில் வெட்ட வெளியில் தான் தங்கியுள்ளனர். ஒரு சிறு கூரை கூட இல்லாமல் தத்தளித்து வருகின்றனர்.