மூளை காய்ச்சலால் பாதிப்படைந்த நடிகை மரணம் அடைந்த அமெரிக்க பிரபலமான நடிகை டெனிஸ் டோர்ஸ்

#America #Actress #Death
Prasuat month ago

அமெரிக்காவில் பிரபலமான நடிகையாகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் டெனிஸ் டோர்ஸ். இவர் கடந்த சில மாதங்களாக மூளை காய்ச்சல் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

இவருடைய சகோதரி டிரேசி தற்போது இணையதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் என்னுடைய சகோதரி டெனிஸ் மூளைச்சாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதை நான் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய சகோதரிக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிறந்த நடிகையாகவும், இயக்குனராகவும், ஒரு சிறந்த குடும்ப உறுப்பினராகவும் இருந்த என்னுடைய சகோதரியின் மறைவை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் டெனிஸ் டோர்ஸ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.